ஹோமாகம தொழிற்சாலையில் மீண்டும் வெளியேறிய புகை
ஹோமாகம கட்டுவன பகுதியில் அண்மையில் தீப்பிடித்த தொழிற்சாலையில் மீண்டும் தீ பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, தொழிற்சாலையைச் சுற்றி கடும் புகை பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் தீப்பிடித்த தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த குளோரின் மீது மழைநீர் விழுந்ததால் புகை வெளியேறியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பனாகொட இராணுவ முகாம் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீ அபாயத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
2 Comments