26 9
இலங்கைசெய்திகள்

ஹிருணிகாவிற்கு எதிரான மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

ஹிருணிகாவிற்கு எதிரான மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து ஹிருணிகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றம் அறிவிக்கும் தினத்தில் நேரில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் ஹர்டி ஜமால்டின் தாக்கல் செய்த முறைப்பாடு நேற்று (11) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த வழக்கு தொடர்பான எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரியுள்ளார்.

அதன்படி, நவம்பர் 29ஆம் திகதிக்கு முன் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைகளை டிசம்பர் 4ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...

image 1200x800 35 1
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் ஆவணங்கள்: பிரான்ஸ் பிரபலங்கள் மீது பாயும் விசாரணை! – சிறப்புப் புலனாய்வுக் குழு அதிரடி நியமனம்!

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளில், பிரான்ஸ் நாட்டின் அரசியல்...

image 1200x800 31 1
செய்திகள்உலகம்

எப்ஸ்டீனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை! – அதிர்ச்சித் தகவல்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் அதிரடி விளக்கம்!

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 35 லட்சம் பக்கங்கள் கொண்ட இரகசியக் கோப்புகளை அமெரிக்க...