அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளில் மாற்றம்

tamilnaadi 127

அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளில் மாற்றம்

அதிவேக நெடுஞ்சாலைகளின் உள்ளகப் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் ரக்னா லங்கா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுவரை இந்த கடமையை முன்னெடுத்து வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிலிருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பிற்காக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், அதற்காக மாதாந்தம் சுமார் 12 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகம மற்றும் குருநாகலுக்கு இடையிலான பகுதியின் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை கூறியுள்ளது.

Exit mobile version