tamilni 273 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

Share

இலங்கையில் முதியவர்களில் நான்கில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளின் நடுத்தர வயதுடையவர்களிடமே இந்த நிலைமையை அதிகம் இனங்காண முடியும்.

இலங்கையில் கோவிட் அனர்த்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை போன்ற சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளும் இந்த நிலைக்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகளை வெளிப்படுத்தாததால் அமைதியான மரணம் ஏற்படுகிறது என வைத்திய நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமை மோசமாகும்போது மிகவும் அரிதாக கடுமையான தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், மக்களிடையே உள்ள உயர் இரத்த அழுத்தமும் ஒரு காரணம் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

“உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் மரணம் வரை கண்டறியப்படாமல் போகும், ஏனெனில் அது அறிகுறிகளைக் காட்டாது. இந்த நிலை கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு போன்ற நிலைகள் அவற்றில் முக்கியமானவையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...