17 24
இலங்கைசெய்திகள்

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...