கொழும்பில் இடி மின்னலுடன் கனமழை: வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது!

images 10 1

கொழும்பில் இன்று இரவு திடீரென இடி மின்னலுடன் கூடிய பெருமழை கொட்டிப் பெய்கிறது. சுமார் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்த இந்தத் தீவிர மழையினால், நகரின் பல பிரதான வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

திடீர் வெள்ளம் காரணமாகப் பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய அனர்த்த நிலைமைகள் தணிந்திருந்த நிலையில், மீண்டும் பெய்யும் இந்தக் கனமழை காரணமாக நகரின் வடிகால் அமைப்புகளின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version