24 6620a3d221380
இலங்கைசெய்திகள்

மரடைப்பால் அதிகளவான மரணங்கள்: மக்களுக்கு அறிவுறுத்தல்

Share

மரடைப்பால் அதிகளவான மரணங்கள்: மக்களுக்கு அறிவுறுத்தல்

சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு அமைந்துள்ளதா சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் அலுவலகத்தின் விசேட வைத்தியர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை பொது மருத்துவமனைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பால் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்கள் சேதமடைவதால் இந்த நோய் நிலை ஏற்படுகிறது. இதை மாரடைப்பு அல்லது ஹாட் ஹெட்டக் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தொற்றா நோய்களுக்கு பல சிறப்பு ஆபத்து காரணிகள் உள்ளன. முதலாவது ஆரோக்கியமற்ற அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெயின் பயன்பாடு, உடல் செயல்பாடு இல்லாமை, புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றின் பயன்பாடு ஆகும்.

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணனிகளின் அதிகரித்த பாவனையினால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவரும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையிலிருந்து விலகியுள்ளனர். குழந்தைகள் ஒரே இடத்தில் அதிக நேரம் செலவழித்து ஒன்லைன் கம்ப்யூட்டர் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

வீட்டில் வயதான இல்லத்தரசிகள் கூட எப்போதும் டி.வி பார்த்து மணிக்கணக்கில் அமர்ந்துதான் இருப்பார்கள். மேலும் வயது வரம்பு இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருப்பது பெரும் சோகம். நாம் முடிந்த போதெல்லாம் நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...