10
இலங்கைசெய்திகள்

சுகாதார அமைப்புக்கு சுமையாக மாறியுள்ள நோய்கள்!

Share

சுகாதார அமைப்புக்கு சுமையாக மாறியுள்ள நோய்கள்!

நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களினால் சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேற்படி நோய்களுக்கான சிகிச்சை சேவைகளைப் போன்று நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற, இலங்கை போஷாக்கு சங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விஞ்ஞான ஆய்வு அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,”நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான அடிப்படை விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குவது மிகவும் அவசியம்.

நோய்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். இலங்கை ஊட்டச்சத்து சங்கம் இதில் முன்னணியில் உள்ளது.

ஊட்டச்சத்தை உயர்த்தி, சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தி, அதிக உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

இது தனிநபர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், இந்த நாட்டில் சுகாதார அமைப்பின் தேவையற்ற செலவைக் குறைக்கவும் உதவும்.

இந்த இலக்கை அடைவதற்கு, மருத்துவ வல்லுநர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகப் பிரிவுகளின் பங்களிப்பு செய்ய வேண்டும்.” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...