tamilni 282 scaled
இலங்கைசெய்திகள்

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை

Share

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

சிறுவர்கள் வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிகளவில் வியர்வை வெளியேறுவதால் நீர்ச்சத்து குறைவடையும் வாய்ப்பு உள்ளதாக பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக நீர், இளநீர், தேசிக்காய் சாறு, தோடம்பழம், மாதுளம்பழம், ஜீவனி போன்ற நீராகாரங்களை சிறுவர்களுக்கு அதிகமாக வழங்குமாறும் பெற்றோர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 29 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர் சுதர்ஷனி விதானப்பத்திரண தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வறட்சியினால் நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியால் 15 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 75,287 பேர் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...