10 5
இலங்கைசெய்திகள்

தரமற்ற மருந்து விநியோகம் : சபையில் தெளிவுபடுத்திய சுகாதார அமைச்சர்

Share

தரமற்ற மருந்து விநியோகம் : சபையில் தெளிவுபடுத்திய சுகாதார அமைச்சர்

தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பினால் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நேற்றைய (06) நாடாளுமன்ற அமர்வில் தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் (05) ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த கருணாதிலக (Gayantha Karunathilaka) முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்; “அரச வைத்தியசாலைகளுக்கு 500 தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானவை. தவறான செய்திகளை சமூகமயப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் (NMRA) பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தான் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் வினைத்திறனற்ற நிலை காணப்படுகின்றது. தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.

500 தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது, ஆனால் அது எவ்வகையான மருந்துகள் என்று வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. ஆகவே தாம் பெற்றுக் கொள்ளும் மருந்து தரமற்றதா என்று பொது மக்கள் சந்தேகம் கொள்ள நேரிடும்.

ஆனால் அவ்வாறு கூறும் விதமாக தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக செல்லவில்லை. தரத்தின் தன்மை தொடர்பாக பிரச்சினை இருப்பின் அது அறிவிக்கப்படும்.

இது தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெளிவுபடுத்தினார்.

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...