நாடாளுமன்றத்தில் மிக முக்கிய இரு குழுக்களான கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவிகளை எதிரணிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது கோப் மற்றும் கோபா குழுக்களுக்கான தலைவர்கள் ஏன் இன்னும் நியமிக்கப்படவில்லை என எதிரணி கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,
” சபாநாயகர் வெளிநாடு சென்று நேற்றுதான் நாடு திரும்பினார். அவர் நாடாளுமன்றம் வந்த பிறகு இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று குறிப்பிட்டார்.
” மேற்படி இரு குழுக்களினதும் தலைமைப்பதவி எதிரணிக்கு வழங்கப்படும் வகையில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.” என இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
#SriLankaNews