ஹரின் பெர்னாண்டோவிற்கு எதிராக வீதிக்கிறங்கிய பொதுமக்கள்
கொழும்பில் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று தற்போது ஆரம்பமாகியுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கடந்தவாரம் இந்தியாவில் இலங்கை தொடர்பில் முன்வைத்த கருத்தானது கண்டிக்கத்தக்கது என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.