கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாசகார செயல்

24 66353afe5f28c

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாசகார செயல்

தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகைதந்த வீசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் நாசகார செயலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் இன்று ஊடகங்களிடம் கருத்துரைத்துள்ளார்

இதன்போது இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் வீசா வழங்கும் செயற்பாடுகள் ஒப்படைக்கப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் செயற்படுவதால் ‘VFS Global’ நிறுவனமானது அதிகளவிலான இடத்தைப் பெற்றுள்ளதாகவும், சுற்றுலா ஊக்குவிப்புச் சேவைகளுக்காக, குறித்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான வீசா கட்டணம் குறைக்கப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர், தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி நியமிக்கும் குழுவின் ஊடாக, அது தீர்மானிக்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

எனினும் தம்மை பொறுத்தவரை 67 நாடுகளுக்கு இலவச வீசா வழங்குவதற்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Exit mobile version