tamilni 314 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இருவரின் தொலைபேசி மற்றும் கடவுச்சீட்டுக்கள் மாயம்

Share

இலங்கையில் இருவரின் தொலைபேசி மற்றும் கடவுச்சீட்டுக்கள் மாயம்

போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இரண்டு கடவுச்சீட்டுகள் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் மடகஸ்கரில் கைது செய்யப்பட்டதன் பின்னர், இருவரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போது, ​​இந்த இரண்டு தொலைபேசிகளும், ஆவணங்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இருவரிடம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்த இந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் இரண்டு கடவுச்சீட்டுகளும் எப்போது காணாமல்போனது என்பது தெரியவரவில்லை என கூறப்படுகின்றது.

இந்த தொலைபேசிகளில் முக்கியமான காணொளிகள், பல்வேறு போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் தொலைபேசி எண்கள் போன்றவை இருந்ததாக குற்றப் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...