30 கோடி கேட்டதில் சிக்குவார்களா தேசபந்து மற்றும் டிரான் : நீதிமன்ற வாயிலில் வைத்து அம்பலமான இரகசியம்

29 5

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர், பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவரான ஹரக் கட்டாவிடம் 30 கோடி ரூபா பணம் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஹரக் கட்டா, வழக்கு விசாரணைக்காக இன்றையதினம் பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறிச் செல்லும் போது, ஊடகங்களைப் பார்த்து மேற்கூறிய கருத்தை சொல்லிச் சென்றுள்ளார்.

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு 30 கோடி ரூபா பணத்தினைக் கொடுக்காத காரணத்தினால் தான் தங்காலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஹரக் கட்டா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பணத்தினைக் கொடுக்காத காரணத்தினால், கோடி ரூபா செலவிட்டு தன்னை தடுத்து வைத்திருப்பதாகவும் ஹரக் கட்டா குறிப்பிட்டார்.

தங்காலையில் தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கு மாதத்திற்கு 10 மில்லியன் ரூபா செலவாகும் என்றும் ஹரக் கட்டா தெரிவித்துள்ளார்.

மேலும், வெளியில் சொல்ல வேண்டிய பல விடயங்கள் இன்னும் உள்ளன. அவற்றை எல்லாம் விரைவில் நான் வெளிப்படுத்துவேன் என்றும் ஹரக் கட்டா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை விடுவிப்பதற்கு பேரம் பேசப்பட்டிருக்கலாம் என்றும் அது தொடர்பிலேயே ஹரக் கட்டா இன்று இவ்வாறு கருத்தினை வெளியிட்டுச் சென்றிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version