Untitled 1
இலங்கைசெய்திகள்

விபத்தில் உயிரிழந்த யாழ்.இந்திய துணை தூதரக ஊழியர்:இளைஞனின் மனிதநேயம் மிக்க செயல்

Share

அண்மையில் விபத்தில் மரணமடைந்த யாழ். இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றிய பிரபாவின் மனைவியின் பெறுமதி மிக்க பொருட்களை உரியவர்களிடம் கையளித்த இளைஞனின் முன்மாதிரியான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரபாவின் மனைவியான பல்கலைக்கழக விரிவுரையாளரின் தாலி, சிறு தொகைப் பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை மிரோசிகன் என்ற இளைஞன் கண்டெடுத்து இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, விபத்துள்ளானவர் யாழ். இந்திய தூதரகத்தில் கடமையாற்றியவர் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட குறித்த இளைஞர் கண்டெடுத்த பொருட்களை உரிய இடத்தில் ஒப்படைத்துள்ளார்.

இவ்வாறு மனிதநேயம் மிக்க செயலை புரிந்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...