வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

25 688df4fc39fbe

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வயலில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பின்னர் துப்பாக்கியுடன் ஹுங்கம பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version