புத்தளத்தில் துப்பாக்கிச்சூடு : பெண்ணுக்காக மோதல்

tamilni 503

புத்தளத்தில் துப்பாக்கிச்சூடு : பெண்ணுக்காக மோதல்

புத்தளம் – தப்போவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு 10.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த நபர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் – பாவட்டாமடுவ பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ரோஹண என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர், தப்போவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருடன் தொடர்பு இருந்துள்ளதாகவும், அங்கு சென்ற வேளையிலேயே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபரும் குறித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நொண்டி மஹத்துன் என்ற சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version