தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு

rtjy 107

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு

வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காலி வீதியில் மர்மநபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு அருகில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் 42 மற்றும் 52 வயதுடைய தெனிப்பிட்டிய மற்றும் வெலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற மீன் கடையின் உரிமையாளர் எனவும், மற்றையவர் அதே மீன் கடையில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version