9 18
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – வீதியால் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு

Share

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – வீதியால் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு

காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கும்புர வீதியின் ஹருமல்கொட பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் நடந்து சென்ற இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் காயமடைந்தார். மற்றைய நபர் தப்பியோடியதாகவும், பின்னர் காயமடைந்த நபர் அருகில் இருந்த முச்சக்கரவண்டியில் ஏற முற்பட்ட போது, ​​துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் முச்சக்கரவண்டியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முச்சக்கரவண்டியின் சாரதியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 34 மற்றும் 54 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...