கைத்தொழில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி!

16 13

கைத்தொழில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் 1.2 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

2023 ஆகஸ்டில் 90.2 ஆக இருந்த கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் , இந்த ஆண்டு ஆகஸ்டில் 91.3 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு சற்று குறைந்துள்ளது.

ஜூலை மாதத்தில் 16,373 ரூபாவாக இருந்த வறுமைக் கோடு ஆகஸ்ட் மாதத்தில் 16,152 ரூபாவாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2023 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகரிப்பாகும் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பானங்கள் மற்றும் புகையிலை தொடர்பான உற்பத்திகளில் வீழ்ச்சி காணப்பட்டதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version