9 16
இலங்கைசெய்திகள்

அதிகரித்து வரும் தடுப்பூசி தட்டுப்பாடு: குற்றம் சுமத்தும் வைத்தியர்கள்

Share

அதிகரித்து வரும் தடுப்பூசி தட்டுப்பாடு: குற்றம் சுமத்தும் வைத்தியர்கள்

நாட்டின் மருத்துவமனை அமைப்பில் அத்தியாவசிய தடுப்பூசிகளின் இருப்பு தீர்ந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜி.ஜி சமல் சஞ்சீவ மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

இதனால் நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், மயக்கமடைந்த பின்னர் சுயநினைவை மீட்டெடுக்கும் நியோஸ்டிக்மைன் தடுப்பூசி மருந்து அனேகமான வைத்தியசாலைகளுக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், மயக்க நிலையடைய பயன்படுத்தப்படும் லிக்னோகைன் தடுப்பூசி மற்றும் மஞ்சள் காமாலையை தடுக்க நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

அவசர இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற பல அத்தியாவசிய மருந்துகள் மருத்துவமனைகளில் உள்ளன. அவை தற்போது தீர்ந்துவிட்டது என ஜி.ஜி சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஜி.விஜேசூரிய கூறுகையில், தற்போது பல தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் 13ஆம் திகதி புதிய தடுப்பூசிகள் கையிருப்பில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...