நாளை மறுதினம் மாபெரும் தாதிய ஆர்ப்பாட்டம்!!

நாளை மறுதினம் வியாழக்கிழமை வட மாகாணம் முழுவதிலும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டப் பேரணியும் முன்னெடுக்கப்பட வுள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் யாழ். போதனா வைத்தியசாலை பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

எதிர்வரும் 30/12/2021 அன்று வியாழக்கிழமை வடமாகாணம் முழுவதிலும் சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும் கவனயீர்ப்பு போராட்டத்திலும் தொடர்ந்து ஆர்ப்பாட்ட பேரணியிலும் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வைத்தியசாலை உறுப்பினர்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதனால் வைத்தியசாலையில் எமது அவசர மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே சங்க உறுப்பினர்கள் ஈடுபடுவோம்.

எனவே அவசர தேவையுடையோர் மாத்திரமே அன்றைய தினம் வைத்தியசாலைக்கு வருமாறு கேட்டுக் கொள்வதோடு, நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு எமது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

WhatsApp Image 2021 12 28 at 11.23.57 AM

Exit mobile version