4 36
இலங்கை

பொதுத்தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

Share

பொதுத்தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதை போன்று பொதுத்தேர்தலையும் நடத்துவதற்கு அரச துறைகளினதும், நாட்டு மக்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அரசியலமைப்பின் 70 உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைய மற்றும் 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவின் விடயதானங்களுக்கு அமைய 9 ஆவது நாடாளுமன்றம் (நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ) கலைக்கப்பட்டது.

பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் 2024.10.04 ஆம் திகதி முதல் 2024.10.11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் வேட்புமனுக்களை கையளிக்க முடியும்.

அதற்கமைய 2024.11.14 ஆம் திகதி வியாழக்கிழமை பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்தவும், 10 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வை 2024.11. 21 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்துவதற்கும் தீர்மானித்து ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய தேர்தல் பணிகளை முன்னெடுப்போம்.

ஜனாதிபதித் தேர்தலில் போது அரச சொத்துக்கள் பயன்பாடு தொடர்பில் வெளியிட்ட சுற்றறிக்கைகள் மற்றும் நிருபங்கள் பொதுத்தேர்தலுக்கும் ஏற்புடையதாக இருக்கும். பொதுத்தேர்தல் தொடர்பிலான சுற்றறிக்கைகளை இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளோம்.

2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்துக்கு அமைவாகவே பொதுத்தேர்தல் நடத்தப்படும். பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 நாட்களுக்கு பின்னர் தேர்தல் செலவினங்கள் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவோம்.

ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதாகவும், நியாயமானதாகவும் நடத்தப்பட்டது. எவ்வித பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு வழங்கிய ஒத்துழைப்பை பொதுத்தேர்தலுக்கும் வழங்குமாறு அரச துறைகளிடமும், நாட்டு மக்களிடமும் வலியுறுத்துகிறோம் ”என்றார்.

Share
தொடர்புடையது
Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...

01 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோர்முஸ் நீரிணை மூடல்: இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என எச்சரிக்கை!

மத்திய கிழக்கின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திடீரென...

01 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணம் உயர்ந்தாலும் நீர்க் கட்டணத்தில் மாற்றமில்லை: தேசிய நீர் வழங்கல் சபை தகவல்!

நாட்டில் அண்மையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், தற்போதைக்கு நீர்க் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் ஏதுமில்லை...