வவுனியா பல்கலைக்கழகத்தை ஆட்கொண்ட கொவிட்!!

vauniya university

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் 36 மாணவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரியர்கள் இருவருக்கும் உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் 50 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா பல்கலைக்கழகத்தில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்ட மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 16 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி 20 பேருக்கும் வவுனியா பல்கலைக்கழகத்தில் 16 பேருக்குமாக மொத்தம் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றாளர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version