25 683bc7c6b9af4
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்

Share

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் நளின் பெர்னாண்டோ தண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

கரம் போர்ட்களை மக்களுக்கு வழங்கிய காரணத்தினால் இருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் இந்த கரம் போர்ட்களை தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

திருடர்களை பிடித்து அவர்கள் கொள்ளையிட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய திருடர்களை பிடித்து களவாடப்பட்ட சொத்துக்களை மீளப் பெறும் வரையில் மக்கள் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திருடர்களுக்கு தண்டனை விதிப்பது சிறந்த விடயம் எனவும் அதன் ஊடாக மக்களுக்கு ஏதேனும் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

களவாடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் கரம் மற்றும் தாம் போர்ட்களை மக்களுக்கு வழங்கிய காரணத்தினால் அந்தப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய திருடர்களை பிடித்து அவர்கள் களவாடிய சொத்துக்கள் மற்றும் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் மக்கள் அதனையே எதிர்பார்க்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...