24 66a5ff1dcf301
இலங்கைசெய்திகள்

அரச ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள்!

Share

அரச ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள்!

அரச ஆதரவுடனேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வாரம் முழுவதும் நாங்கள் கறுப்பு ஜூலை என்று அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக, 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலே 24ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதி வரைக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய வன் செயல்களை நினைவு கூருகிற ஒரு வாரமாக இதனை நாங்கள் அனுஷ்டிக்கிறோம்.

இந்த வாரத்திலே பல காலமாக பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடத்தப்பட்டு வந்து இறுதியிலே 83ஆம் ஆண்டு மிக மிக மோசமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

அரச இயந்திரங்களினாலே அரசாங்கங்களுடைய நிகழ்ச்சி நிரலிலே தான் இந்த வன்முறைகள் காலத்துக்கு காலம் நடைபெற்று வந்திருக்கின்றன.

50ஆம் ஆண்டுகளிலே அதன் பின்னர் 1971ஆம் ஆண்டு 1981ஆம் ஆண்டு என்று சொல்லி தொடர்ச்சியாக தெற்கிலே வாழ்கிற தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. அந்த வன்முறைகளிலே முக்கிய விடயத்தை அவர்கள் கண்ணும் கருத்துமாக அவதானித்திருக்கிறார்கள்.

அது தமிழ் மக்களுடைய பொருளாதாரத்தை சீரழிக்கிறது எங்களுடைய வர்த்தகர்கள் பொருளாதாரத்தை நிமிர்த்தி வைத்திருந்தவர்கள் அவர்களுடைய வர்த்தக ஸ்தாபனங்கள் கடைகள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே இந்த அரச நிகழ்ச்சி நிரலிலே தமிழ் மக்களுடைய பொருளாதாரத்தை அழிப்பது ஒரு பெரிய முக்கிய பங்காக இருந்திருக்கிறது. இப்பொழுது நாடு வங்குரோத்து அடைந்திருக்கின்றது தங்களுடைய பொருளாதாரத்தையும் சீரழித்து விட்டார்கள் எங்களை அழிப்பதாக நினைத்துக்கொண்டு இறுதியிலே நாட்டினுடைய பொருளாதாரத்தையும் சீரழித்திருக்கிறார்கள்.

எங்களுடைய வர்த்தகர்களுடைய பொருளாதாரத்தை அழித்தது மட்டுமல்ல அதன் பிரதி பலனாக பல ஆற்றல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியே போய்விட்டார்கள். அவர்கள் தனவந்தர்களாக வாழுகிறார்கள் இந்த வன்முறைகளினாலேதான் நாட்டிலே அதற்கு பிறகு மூன்று தசாப்த யுத்தமும் நடந்து அதற்கும் பல விதமான செலவீனங்கள் ஏற்பட்டன.

வன்முறைகள் நடைபெறுகிற காலத்திலே கொழும்பில் வாழ்ந்தவன் என்ற ரீதியிலே எனக்கு நேரடியான அனுபவங்கள் உண்டு. 1977ஆம் ஆண்டிலே அரசாங்கம் வன்முறையாலே பாதிக்கப்பட்டவர்களை தொடர்ச்சியாக தலைநகரிலே வைத்து பாதுகாக்க முடியாது என்று சொல்லி எங்களையெல்லாம் விமானத்திலே இலவசமாக அனுப்பி வைத்தார்கள்.

1983ஆம் ஆண்டு பயங்கர வன்முறை நடந்த போது நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு ஓடி வேறு இடங்களிலே புகலிடம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது முதலாவதாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அகதிக் கப்பலிலே வந்தவன் நான். மூன்று நாட்களாக தொடர்ச்சியாக எதுவித உணவுமில்லாமல் வந்திருந்தேன்

ஏனென்றால் 29ஆம் திகதி அந்த கப்பல் துறைமுகத்திலே இருந்து புறப்பட இருந்த வேளையிலே மிக மோசமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள்

ஆகையினாலே இனிமேலும் கப்பல் துறைமுகத்திலே இருப்பது பாதுகாப்பில்லை என்று சொல்லி உண்வு இல்லாமலே கப்பல் புறப்பட்டது” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...