இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதென மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாண்டு நிறைவடையும்வரை இத்தொகையை தக்கவைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்தது. இதனால் பல பிரச்சினைகள் உருவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment