rtjy 249 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் இரு உத்தியோகத்தர்களின் பதவிகளை மாற்ற ஆளுநர் திட்டம்

Share

வடக்கில் இரு உத்தியோகத்தர்களின் பதவிகளை மாற்ற ஆளுநர் திட்டம்

வட மாகாண ஆளுநரின் செயலாளரான வாகீசன் மற்றும் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) குகநாதன் ஆகியோரின் பதவிகளை மாற்றுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் திட்டமிட்டுள்ளார் .

வடக்கு மாகாணத்தில் எவ்வித ஊழல் மோசடிகளில் தொடர்புபடாத நேர்மையான அதிகாரிகளை அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து விலக்கி கீழ் நிலைப் பதவிகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநரின் செயலாளராக இருந்த வாகீசனை மகளிர் விவகார அமைச்சுக்கும் மகளிர் விவகாரத்தில் அமைச்சின் செயலாளராக இருந்த ரூபினி வரதலிங்கத்தை பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகத்திற்கும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிரதிப் பிரத செயலாளராக இருந்த குக நாதனை உள்ளூராட்சி அமைச்சுகும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த தடவை வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவி வகித்தபோது மன்னாரில் அரச காணிகள் பகிர்ந்தாளிப்பதில் தனக்கு சார்பாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக மாகாண ஆணையாளர் பதவியில் இருந்து குகநாதனை மாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...