வருட வருமானம் 2000 மில்லியனுக்கும் அதிகமாக ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு புதிய வரி விதிக்கும் சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அனுமதி கோரி அமைச்சரவையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
2,000 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது கம்பனிகளுக்கு ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25 வீதமான மிகைவரியை விதிப்பதற்கு 2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள மிகைவரிச் சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment