4 36
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

வாகன இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள், கிரேன்கள், கல்லி போவர் போன்ற சிறப்பு நோக்க வாகனங்கள் மற்றும் சிறிய கார்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவுள்ளது.

கடந்த 18ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, முதல் கட்ட வாகன இறக்குமதி தாராளமயமாக்கல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுங்க ஆவணங்களை சமர்ப்பித்த 90 நாட்களுக்குள் நுகர்வோருக்காக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வதற்கு வாகன இறக்குமதியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு 90 நாட்களுக்குள் பதிவு செய்யப்படவில்லை எனில், வாகனங்களின் காப்பீட்டு மதிப்பில் 3 சதவீதம் மாதாந்திர அபராதம் விதிக்கப்படும்.

மேலும், ஒருவர் தனது பெயரில் வாகனத்தை பதிவு செய்தால், அதனை மூன்று ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என்பதோடு தாமதக் கட்டணம் செலுத்தாமல் எந்த வாகனத்தையும் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்ய முடியாது எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமதக் கட்டணம் செலவு, காப்பீடு மற்றும் வாகன விலையின் 45 சதவீதம் ஆகும்.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...