Mahinda Ranil 2 1 1 scaled
இலங்கைசெய்திகள்

ஒரே நிகழ்விற்கு நான்கு உலங்கு வானூர்திகளில் யாழ் சென்ற முக்கியஸ்தர்கள்!

Share

ஒரே நிகழ்விற்கு நான்கு உலங்கு வானூர்திகளில் யாழ் சென்ற முக்கியஸ்தர்கள்!

ஒரே நிகழ்வில் பங்கேற்பதற்காக நான்கு உலங்கு வானூர்திகளில் அரசாங்கத்தின் 4 முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணம் பயணம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விமான படை கண்காட்சிக்காக இவ்வாறு நான்கு முக்கியஸ்தர்கள் நான்கு உலங்கு வானூர்திகளை பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி சாவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன ஆகியோர் இவ்வாறு தனித் தனியாக உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...