9 25
இலங்கைசெய்திகள்

தமிழ் சினிமா துறை குறித்து கவனம் செலுத்தவுள்ள அரசாங்கம்

Share

இலங்கையில் தமிழ் சினிமாவை ஒரு தொழில்துறையாக வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்று புத்தசாசனம், மத அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மன்றம் ஆகியவற்றிற்கான பணிப்பாளர் சபையை நியமிக்கும் நிகழ்வு, ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (18) நடைபெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2004 மற்றும் 2005 காலப்பகுதியில் அனைத்து (சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்) சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதாகவும், தமிழ் சினிமாவை இந்த நாட்டில் இன்னும் ஒரு தொழில்துறையாக நிலைநிறுத்த முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே, எதிர்காலத்தில் தமிழ் சினிமாவை இந்த நாட்டில் ஒரு தொழில்துறையாக வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.

மேலும், தேசிய திரைப்படக் கழகம் நவீன காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டதோடு தனியார் துறையுடன் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

இலங்கை மன்றம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த காலங்களில் இலங்கை மன்றத்தில் காணப்பட்ட பலவீனங்களை தடுத்து, தற்போதைய அதிகாரிகள் நேரடியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நேற்றையதினம் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அரசு கரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. ப்ரின்ஸ் சேனாதீர நியமிக்கப்பட்டார்.

மேலும் கலாநிதி சுனில் விஜேசிறிவர்தன, எம். டி. மஹிந்தபால, டபிள்யூ. ஜி. டிதிர விக்மல், சட்டத்தரணி தக்ஷிகா திசரங்கனி பெரேரா, எம். எஸ். கே. ஜே. பண்டார, பி. என். தம்மிந்த குமார, வை. ஐ. டி. குணவர்தன ஆகியோர் சக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...