பல்கலைக்கழகத்தில் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் மாணவர்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்க அரசாங்கம் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளது.
குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு அதிகாரியை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவிலும் இந்த அதிகாரி நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடயத்தைப் பற்றி விவாதிக்க அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.