அரச பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

24 6607fa3d1f38d

அரச பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

எதிரவரும் காலங்களில் அரச பாடசாலைகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட உள்ளன என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தரம் 1-5 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாக வரையறுக்கப்படவுள்ளன.

இப்பாடசாலைகளின் அதிபராக இலங்கை அதிபர்கள் சேவையின் 3ஆம் (SLPS) தரத்தினை பூர்த்தி செய்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மேலும், தரம் 6-9 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் கனிஷ்ட இடை நிலை (Junior Secondary) பாடசாலைகளாக வரையறுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பாடசாலைகளின் அதிபராக இலங்கை அதிபர்கள் சேவையின் 2ஆம் தரத்தினை பூர்த்தி செய்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தரம் 10-13 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகளை சிரேஷ்ட இடை நிலை (Senior Secondary) பாடசாலைகளை மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பாடசாலைக்கு அதிபராக தர இலங்கை அதிபர்கள் சேவையின் 1ஆம் தரத்தினை பூர்த்தி செய்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இதற்கமைய, நாடளாவிய ரீதியிலுள்ள 10000இற்கும் மேற்பட்ட சகல பாடசாலைகளும் மீளமைக்கப்படும்.

இவற்றை பராமரிக்க 120 கல்வி வலயங்கள் காணப்படுவதோடு, ஏற்கனவே உள்ள 100 கல்வி வலயங்களின் எண்ணிக்கையில் 20 புதிய கல்வி வலயங்கள் உருவாக்கப்படும். இவை யாவும் கல்வி சீர்திருத்தத்திற்குட்பட்ட ஏற்பாடுகளாகும்.” என விளக்கம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version