3 54
இலங்கைசெய்திகள்

ராஜபக்சர்களின் மோசடிகளை ஆதரித்த ஜே.வி.பி: எதிர் தரப்பு பகிரங்கம்!

Share

ராஜபக்சர்களின் மோசடிகளை ஆதரித்த ஜே.வி.பி: எதிர் தரப்பு பகிரங்கம்!

ஹெல்பிங் அம்பாந்தோட்டை திட்டத்தில் மோசடி குற்றச்சாட்டில் மகிந்த ராசபக்சவின் பெயர் தெரிவிக்கப்பட்டிருந்ததை அறிந்துகொண்டே 2005இல் அவரை பிரதமராக்க மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுத்திருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மக்கள் விடுதலை முன்னணி 2005இல் எடுத்த தவறான தீர்மானங்களின் பெறுபேறாகவே தற்போது மோசடிகள் தொடரபில் கதைக்க வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (27.02.2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி செலவின தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர்,

ராஜபக்சர்களின் ஊழல் மோசடிகளுக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும்.

2005ஆம் ஆண்டில் ராஜபக்சர்களை இப்போது ஆட்சியில் இருப்பவர்களே ஆட்சிக்கு கொண்டு வந்தனர். அப்போதும் நான் அவர்களுக்கு எதிரான தரப்பிலேயே இருந்தேன்.

ஆனால் ராஜபக்சர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று இப்போது கூறுபவர்கள், அவர்தான் சிறந்த நபர் என்று கூறும் மேடையிலேயே அன்று இருந்தனர்.

நீங்கள் எடுத்த தவறான அரசியல் தீர்மானங்களின் பெறுபேறுகளையே இப்போது நீங்கள் கூற வேண்டி ஏற்பட்டுள்ளது.

ராஜபக்சர்கள் திருடர்கள் என்று தெரிந்துகொண்டே அவர்களை ஆட்சிக்கு கொண்டுவந்தீர்கள்.

ராஜபக்சர்களின் மோசடிகளை கூறும் போது எங்களை பார்த்து கூற வேண்டாம். அன்று நீங்கள் எடுத்த தவறான தீர்மானத்திற்கே இன்று மக்கள் நட்ட ஈட்டை செலுத்த வேண்டியுள்ளது” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...