அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress Loan) ஆகியவற்றை அதிகரிப்பதற்கான முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளார்.

தற்போது வழங்கப்படும் பண்டிகை முற்பணமான ரூபா 10,000 இனை ரூபா 15,000 ஆக அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கேற்ப, 4.2 சதவீத வட்டி அடிப்படையில் பெற்றுக்கொள்ளக் கூடிய இடர் கடன் முற்பணத் தொகையை, ரூபா 250,000இலிருந்து ரூபா 400,000 வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முற்பணங்கள் குறுகிய காலத்திற்குள் இடையூறின்றி பெற்றுக் கொள்ளக் கூடியதாக, அரச ஊழியர்களின் முற்பணக் கணக்கு வரையறைக்கென ரூபா 10,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version