1 15
இலங்கைசெய்திகள்

அரச அதிகாரிகளே பொறுப்பு : கண்டிப்பாக கூறிய பிரதமர்

Share

அரச அதிகாரிகளே பொறுப்பு : கண்டிப்பாக கூறிய பிரதமர்

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் சரியான தன்மை மற்றும் அவை மக்களுக்குக் கிடைப்பதற்கு அரச அதிகாரிகளே பொறுப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (harini amarasuriya)தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து அரசாங்க அபிவிருத்தித் திட்டங்களிலும், அரசாங்க அதிகாரிகளின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி உரிய தரப்பினருடன் நல்ல உரையாடலைக் கட்டியெழுப்பும் திறன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்

எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அமைச்சு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அநுர தலைமையிலான அரசாங்கம் அரச சேவைகளில் இறுக்கமான நடைமுறைகளை கடைப்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...