இலங்கையை காப்பாற்ற அரசு கடுமையாக போராடுகிறது – பிரசன்ன!!

Prasanna 1

கொவிட் தொற்றினால் பொருளாதாரரீதியில் பாதிக்கப்பட்ட நாட்டைக் காப்பாற்ற அரசாங்கம் கடுமையாக போரைாடுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மினுவாங்கொடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

இதற்காக குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அரசாங்கத்திடம் தொலைநோக்குப் பார்வையும் வேலைத்திட்டமும் உள்ளது.

போருக்குப் பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்த ராஜபக்‌ஷ தலைவர்களுக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதும் சாவலான விடயமல்ல.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தற்போதைய அரசாங்கத்தை குற்றம் சாட்ட எதிர்க்கட்சி அரசாங்கம் முயற்சிகின்றது.

எனினும் கொவிட் 19 தொற்றே காரணம். இது நம் நாடு மட்டும் எதிர்கொள்ள வேண்டிய நிலை அல்ல. இது உலகம் முழுவதற்கும் பொதுவான நிலை. இந்த நிலையை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து எதிர்க்கட்சிகள் பொய்களை உருவாக்கி வருகின்றன. எதிர்க்கட்சிகள் உருவாக்கும் பொய்களை நாம் உண்மையில் எதிர்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

#SrilankaNews

Exit mobile version