அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பழைய இருப்பிடங்களில் மீளக் குடியமர்த்துவதற்குப் பதிலாக, பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் மீண்டும் அனர்த்தங்களால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், மீண்டும் மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ள இடங்களில் மக்களை மீளக் குடியமர்த்துவதைத் தவிர்த்து, நிலையான, பாதுகாப்பான இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை, அனர்த்தங்களுக்கு இலக்காகும் பகுதிகளில் வாழும் மக்களின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

