அரச சேவையில் ஆட்சேர்ப்பு தொடர்பில் முக்கிய தகவல்

rtjy 123

அரச சேவையில் ஆட்சேர்ப்பு தொடர்பில் முக்கிய தகவல்

எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொதுப்பணித்துறை அரசுக்கு தாங்க முடியாத பிரச்சனையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது 15 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும்.

மக்கள் தொகையில் சுமார் 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர் உள்ளனர். இது உலகின் மிக உயர்ந்த அரசு ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும்.

இது பெரும் சுமையாக உள்ளதால் தொடர்ந்து அதனை மேற்கொள்ள முடியாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

Exit mobile version