அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்…! ரணில் நடவடிக்கை

24 66554fbe028af

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்…! ரணில் நடவடிக்கை

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், உடனடி தீர்வுகளை வழங்குமாறு அதிபர் அமைச்சரவைக்கு பரிந்துரைத்துள்ளார்.

இதன்படி, ஒவ்வொரு துறையிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதற்கு குழுவொன்றை நியமிக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) முன்வைத்துள்ளதுடன், பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய குறித்த குழுவை விரைவில் நியமிக்குமாறு அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version