10 10
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான தகவல்

Share

இலங்கையில் அதிகளவு அரசத்துறை பணியாளர்கள் இருப்பதாகவும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போதே வேதன மட்டம் குறைவாகவும் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவோர்க் சாக்ஸியன் தலைமையிலான குழுவினர் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்

அத்துடன், அரச ஊழியர்களின் எண்ணிக்கையை சரிசெய்து உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை அதிக மின்சாரச் செலவுகளை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் வலுசக்தி துறையில் உடனடியாக மறுசீரமைப்புகள் அவசியம் என்றும் உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...