அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு : விடுவிக்கப்படவுள்ள பணம்

24 661330d9e06f5

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு : விடுவிக்கப்படவுள்ள பணம்

அரச ஊழியரின் ஏப்ரல் மாத சம்பளத்தை இன்று(08) முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்றையதினம்(07)இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, உயர்த்தப்பட்ட 10,000 ரூபாவுடன், இன்று முதல் நிறுவனங்களுக்கு பணம் விடுவிக்கத் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, 107 பில்லியன் ரூபா, அதிகரிக்கப்பட்ட தொகை மாத்திரம் 13 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டில் உள்ள 28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதம் தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கப்படும் என்றும் இது உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version