4 42
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்தில் கனவாகிவிட்ட அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு

Share

அநுர அரசாங்கத்தில் கனவாகிவிட்ட அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு

அநுர அரசாங்கத்தில் கனவாகிவிட்ட அரச ஊழியர்களின் சம்பள அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டிருந்தார். எனினும், தற்போதைய அரசாங்கம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளத்தை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இன்று அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்பது கனவாகிவிட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

 

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 

சந்தையில் பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், தற்போதைய அரசாங்கம் அதனை கட்டுப்படுத்த தவறியுள்ளது. வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.

 

சந்தையில் அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

 

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தாலும், தற்போது மக்கள் தவறிழைத்து விட்டதாக உணர்கிறார்கள்.

 

தேசிய மக்கள் சக்தி தேர்தலின் போது ஆட்சிக்கு வர எத்தனை வாக்குறுதிகளை அளித்தாலும் இன்று நிறைவேற்ற முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 81
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலை – டயகம வீதியில் பேருந்தும் பாடசாலை வேனும் மோதி விபத்து: மாணவர்கள் காயமின்றித் தப்பினர்

தலவாக்கலை – டயகம பிரதான வீதியின் ஹோல்புறூக் நகருக்கு அருகாமையில் இன்று (மே 12) காலை...

world 80
செய்திகள்உலகம்

இளம்பெண்களின் அந்தரங்கத் தேடல்: ஆபாசப் படங்கள் குறித்த வெளிப்படையான பார்வைகள்

பெண்கள் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்களா அல்லது இது ஆண்களுக்கு மட்டுமே உரியதா என்ற விவாதம் தற்போது...

world 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடக்கம்: யாழ்ப்பாணத்தில் நினைவு ஊர்தி பயணம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17-வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது, இன்று (மே 12) யாழ்ப்பாணம் நல்லூரில்...

world 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க பேராதனை பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பீடத்தில் முதுதத்துவமாணி (M.Phil) பயின்று வந்த விரிவுரையாளர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட...