13 5
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு கிடைத்த அனுமதி! ரணிலுடன் முரண்படும் ஹரிணி

Share

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு கிடைத்த அனுமதி! ரணிலுடன் முரண்படும் ஹரிணி

நடைமுறைகள் ஏதும் தெரியாமல் பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), 40 வருட அரசியல் அனுபவம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்(Ranil Wickremesinghe) தொடர்ந்து முரண்பட்டு வருகின்றார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க(Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரச ஊழியா்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் அரச நடைமுறைக்கு அமைய சமர்ப்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டதாகும். அதன் பிரகாரமே அரச ஊழியா்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு உதய செனவிரத்ன குழு அமைக்கப்பட்டது.

அரச ஊழியர்களுக்கு நூற்றுக்கு 24வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த குழு பரிந்துரைத்திருந்தது. என்றாலும் அந்தளவு சம்பள அதிகரிப்பு செய்ய முடியாது என திறைசேரி தெரிவித்தபோது, உதய செனவிரத்ன குழு திறைசேரியுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்தது.

அதாவது அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை இரண்டு கட்டங்களில் அதிகரிக்க திறைசேரி இணக்கம் தெரிவித்திருந்தது. அதன் பிரகாரம் முதற் கட்டமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆயிரம் ரூபா அதிகரிப்பதற்கும் அடுத்த கட்டமாக 2025ஆம் ஆண்டு அதிகரிக்கவுமே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நடைமுறை பிரதமருக்கு தெரியாது. அது தெரியாமல் 40 வருட அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்ரமசிங்கவுடன் முரண்பட்டுக்கொண்டிருக்கிறார். அரசியல் அனுபவம் இல்லாமையே இதற்கு காரணமாகும்.

அத்துடன் தேசிய மக்கள் சக்தி இன்னும் அரசாங்கம் செய்ய ஆரம்பிக்கவில்லை. அவர்கள் தற்போது எதிர்க்கட்சி அரசியலே செய்து வருகிறார்கள். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தேர்தல் பிரசாரங்களில், முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் வரப்பிரசாரதங்களை குறைப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி மாளிகைக்கு மரக்கறி வந்ததையுமே தெரிவித்து வருகிறார்.

இதனை தடுப்பதன் மூலம் நாட்டின் வருமானம் அதிகரிக்கப்படுவதுமில்லை. பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதும் இல்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூலம் மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுடனே வாக்களித்தார்கள். மக்கள் எதிர்பார்த்த எந்த மாற்றமும் இதுவரை இடம்பெறவில்லை.

அதேபோன்று மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அரசாங்கம் வழங்கி இருந்தது. குறிப்பாக எரிபொருள் விலை சூத்திரத்தை இல்லாதொழித்து, எரிபொருள் லீட்டர் ஒன்றின் மூலம் 160 ரூபா கொமிஸ் பணத்தை நிறுத்தி எரிபொருள் விலையை குறைப்பதாக தெரிவித்தார்கள்.

ஆனால் அவர்கள் தெரிவித்த பிரகாரம் எரிபொருள் விலை குறையவில்லை. அப்படியானால் அந்த 160 ரூபா தற்போது யாருக்கு செல்கிறது என கேட்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...