அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஒன்று திரண்ட அரச ஊழியர்கள்

tamilni 361

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஒன்று திரண்ட அரச ஊழியர்கள்

கொழும்பு – செத்சிறிபாய பகுதியில் அரச ஊழியர்கள் பலர் ஒன்றிணைந்து இன்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தங்களுக்கு 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரியும், 2016ஆம் ஆண்டில் இருந்து கொடுக்கப்படாமல் இருக்கின்ற ஓய்வூதியக் கொடுப்பனவை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வாழ்க்கைச் செலவை குறைத்திடு, மக்களுக்கு நிவாரணம் வழங்கு என பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டத்தினை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version