tamilni 54 scaled
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை

Share

அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை

இலங்கைக்கு கிடைத்த வரி வருமானத்தில், 1265 பில்லியன் ரூபா அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும், ஓய்வூதியத்துக்கும் செலவிடப்பட்டது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உலகில் எந்தவொரு நாடும் வரி வருமானத்தில் நான்கில் மூன்று பங்கினை அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்துக்காக செலவிடுவதில்லை எனவும் அவர் கூறினார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றையதினம் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மரணத்தின் விளிம்பில் இருந்த பொருளாதாரத்தை சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் ஊடாகவே சுவாசிக்கும் மட்டத்துக்கு கொண்டு வர முடிந்துள்ளது. இதன் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் தாம் திருப்தியடைய முடியவில்லை என நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதில், அவர்கள் பிரதானமாகக் குறிப்பிட்டுள்ள விடயம் அரச வருமானம் அதிகரிக்கப்படாமையாகும். இரண்டாவது அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை போதுமானதல்ல என்றும், மூன்றாவதாக ஊழல், மோசடிகளை தவிர்ப்பதற்காக சட்ட மூலம் முன்வைக்கப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படாமை என்பவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் முன்னெடுத்த மீளாய்வு தொடர்பில் வாஷிங்டனிலுள்ள தலைமை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியதன் பின்னரே இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும். பலரும் எண்ணுவதைப் போன்று இது சாதாரண விடயமல்ல. 2022இல் வரிகளை அதிகரித்ததன் பின்னர் 1751 பில்லியன் ரூபா வருமானத்தை மாத்திரமே ஈட்ட முடிந்தது. அதில் 1265 பில்லியன் ரூபா அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும், ஓய்வூதியத்துக்கும் செலவிடப்பட்டது.

உலகில் எந்தவொரு நாடும் வரி வருமானத்தில் நான்கில் மூன்று பங்கினை அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்துக்காக செலவிடுவதில்லை. சமூர்த்தி உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்காக 25 சதவீதம் அரச வரி வருமானத்தில் செலவிடப்படுகிறது.

இந்த செலவுகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பில் மாற்று முன்மொழிவுகளை முன்வைத்திருக்கின்றோம். அத்தோடு, அந்நிய செலாவணி இருப்பை அதிகரிப்பதற்கும், ஊழல் ஒழிப்பு சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...