25 683eb1d35509c
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கு மக்கள் தொடர்பில் அநுர அரசாங்கத்தின் கரிசனை! விரைவில் நிரந்தர வீடு..

Share

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஒன்றிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்குரிய பெருமளவான வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த மாகாணங்களில் 2009 ஆண்டிலிருந்து இதுவரை 274,728 குடும்பங்களைச் சேர்ந்த 914,722 நபர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் 2024 ஆண்டின் இறுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 08 மாவட்டங்களில் 150,488 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அரசு, இந்திய அரசு, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பிற அமைப்புகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது.

2009 ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 08 மாவட்டங்களில் மேலும் 16,759 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் ஆரம்பத்தில் 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட ரூபா 1,100,000 மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 650,000 எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கட்டிட நிர்மாண மூலப்பொருட்களின் தற்போதைய விலைகளுக்கு அமைய 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட ரூபா 1,600,000/- மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 950,000/- எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2025 ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வகையில் நிரந்தர வீடமைப்பு திட்டத்தை நிர்மாணிக்கும் அடிப்படையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிப் பணத்தை பின்வரும் வகையில் அதிகரிப்பதற்கு நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அmதன்படி, 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக அரச நிதியில் வழங்கப்படும் உதவிப் பணத்தை ரூபா 1,500,000 வரை அதிகரித்தல் மற்றும் 340 சதுர அடி வீட்டினை அமைப்பதற்காக அரச நிதியில் வழங்கப்படும் உதவிப் பணத்தை ரூபா 900,000 வரை அதிகரித்தல் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...