அரசியல்இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு சைக்கிள் வழங்க தீர்மானித்தது அரசு!!

bycicle e1643201032906
Share

அரச ஊழியர்கள் மத்தியில் சைக்கிள் பாவனையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த விடயங்களை கருத்தில் கொண்டு ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறைகமைய கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்கியுள்ளது.

இலங்கையில் தற்போது இயங்கு நிலையிலுள்ள வாகனங்கள் 05 மில்லியன்களுக்கு அதிகமாகக் காணப்படுவதுடன், அது 2000 ஆம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரிப்பைக் காட்டுகின்றது.

வருமானம் அதிகரிப்பு மற்றும் நிலவுகின்ற பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதிலுள்ள சிரமங்களாலும் தனியார் மோட்டார் வாகனங்களின் பாவனை அதிகரித்துள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது.

தனியார் மோட்டார் வாகனப் பாவனை துரிதமாக அதிகரித்துள்ளமை, மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளின் பங்களிப்பு குறைவடைந்தமைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வளிமண்டலம் மாசடைவது குறைக்கப்படுவதுடன், உடல் ஆரோக்கியம், வளியின் தரம், சுற்றடல், காலநிலை மாற்றங்கள் மற்றும் தனிநபர் நிதிநிலைமை போன்ற விடயங்களில் நேர்மய விளைவுகளை ஏற்படுத்தும்.

அதனால், பொருளாதார மற்றும் சுற்றாடல் ரீதியான நன்மைகளை அடைவதற்காக, மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளை நிலவுகின்ற போக்குவரத்துக் கட்டமைப்புடன் ஒருங்கிணைப்பது பொருத்தமாக அமையுமென கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக தற்போதுள்ள வீதிகளுக்குப் பொருத்தமான வகையில் சைக்கிள் பாதையை புள்ளடியிட்டு வேறாக்குதல் மற்றும் பாதசாரிகளுக்காக தற்போதுள்ள நடைபாதைகளை மேம்படுத்தல்.

எதிர்வரும் காலங்களில் நிர்மாணிக்கப்படும் வீதிகளுக்கு சைக்கிள் மற்றும் நடைபாதைகளை உள்ளடக்குவதற்கான நடவடிக்கை எடுத்தல்.

அரச அலுவலகர்களுக்க சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

அலுவலகங்களில் சைக்கிள் பாவனையாளர்களுக்கு அவற்றைத் தரித்து வைப்பதற்கான இடங்கள் மற்றும் அவற்றின் அணுகலக்கான வசதிகளை ஏற்பாடு செய்தல். என்பவை தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNEws

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...